உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதியில் இருந்து கலசத்தில் மண் அனுப்பப்பட்டது
- டெல்லி சுதந்திர தின பூங்காவிற்கு பொன்னமராவதியில் இருந்து கலசத்தில் மண் அனுப்பப்பட்டது
- அஞ்சலகங்கள் மூலம் தில்லி பூங்காவிற்கு மண் சேகரிக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து ச்செல்லப்பட்டது
பொன்னமராவதி, அக். 19-
புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் இந்திய அஞ்சல்துறை சார்பில் எனது மண் எனது தேசம் திட்டத்தின் கீழ் தலைநகர் டெல்லியில் அமைய உள்ள 75ம் ஆண்டு சுதந்திர தினப்பூங்காவிற்கு பொன்னமராவதி வட்டார அளவில் மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா கணக்காளர் ஆர்.நமச்சிவாயம் தலைமை வகித்தார். நிகழ்வில் பொ ன்னமராவதி வட்டாரத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் தில்லி பூங்காவிற்கு மண் சேகரிக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து ச்செல்லப்பட்டது. ஊர்வலத்தை பொன்ன மராவதி தாசில்தார் எம்.வசந்தா தொடங்கி வைத்தார்.