உள்ளூர் செய்திகள்

ரயில்வே குறித்த விழிப்புணர்வு பிரசாரம் குழந்தைகள் நடத்தினர்.

பாபநாசம் ெரயில் நிலையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ரயில்வே குறித்த விழிப்புணர்வு

Published On 2023-02-09 15:18 IST   |   Update On 2023-02-09 15:18:00 IST
  • பாபநாசம் ரயில் நிலையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ரயில்வே குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
  • பள்ளி குழந்தைகளுக்கு ெரயிலுக்கு பயணசீட்டு பெறுவது பற்றியும் ெரயில் வருவதை காண்பித்தனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ரயில்வே குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

பாபநாசம் ெரயில் நிலைய அலுவலர் ராம்குமார், திருச்சிராப்பள்ளி தென்னக ெரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் பாபநாசம் ெரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு ெரயிலுக்கு பயணசீட்டு பெறுவது பற்றியும் ரயில் வருவதை காண்பித்தும், ெரயில் நிலைய அமைப்பு பற்றியும், சிக்னல் விளக்கு பற்றியும் எடுத்து கூறினர்.

கபிஸ்தலம் ஜேக் அண்ட் ஜில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. மாணவ-மாணவிகளுக்கு ெரயில்வே குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் தலைவர் சோமநாதராவ், துணை செயலாளர் சுவாமிநாதன், பள்ளி தாளாளர் மைக்கேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News