தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்கம்பத்தில் ஏறி போராட்டம்

Published On 2025-02-28 12:46 IST   |   Update On 2025-02-28 12:46:00 IST
  • பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
  • மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

மேட்டூர்:

மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி கையாளும் பிரிவு, மின் உற்பத்தி பிரிவு, சாம்பல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் வேலையை புறக்கணித்து பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு தொழிலாளர்களுடன் அனல் மின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனல் மின் நிலையம் எதிரே உள்ள மின் கம்பத்தில் 5 தொழிலாளர்கள் ஏறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மின் கம்பத்தில் ஏறிய தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News