உள்ளூர் செய்திகள்

பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகன ஓட்டிகள்.

கொடைக்கானலில் பனிமூட்டத்துடன் மழை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகன ஓட்டிகள்

Published On 2023-11-24 10:02 IST   |   Update On 2023-11-24 10:02:00 IST
  • கொடைக்கானலில் நேற்று காலை முதல் சாரல் தொடங்கி இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
  • மழையும் பெய்ததால் பைக், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மிதமான வெப்பம் நிலவிய நிலையில் அவ்வப்போது மிதமான மழை மற்றும் திடீர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் நேற்று காலை முதல் சாரல் தொடங்கி இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் காலையில் தொடங்கிய மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில் மாணவ-மாணவிகள், அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும், கொடைக்கானல் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.

மதியம் மற்றும் மாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. அத்துடன் மழையும் பெய்ததால் பைக், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். நேற்றைய பருவநிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. இன்று காலை 6 மணி முதல் அவ்வப்போது சாரல் மழையும் பனி மூட்டமும் நிலவி வந்ததால் காலை நேர பணிகளுக்கு செல்பவர்களும் மாணவ-மாணவிகளும் அவதி அடையும் நிலை ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழல் நிலவி வருகிறது.

கொடைக்கானல் ரோஸ்கார்டன் பகுதியில் 15.6, பிரையண்ட் பூங்காவில் 38.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News