உள்ளூர் செய்திகள்

கொலை செய்ய பதுங்கியிருந்த 7 ரவுடிகள் கைது

Published On 2022-12-07 08:01 GMT   |   Update On 2022-12-07 08:29 GMT
  • கமுதி அருகே கொலை செய்ய பதுங்கியிருந்த 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
  • இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேடு மின்சார அலுவலகம் பகுதியில் கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது. சுதாரித்து கொண்ட போலீசார் 7 பேரையும் சுற்றி வளைத்தனர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை சோதனை செய்த போது 5 கத்திகள், வாள், மிளகாய் ெபாடி ஆகியவை இருந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் (33), சரவணகுமார் என்ற தக்கலை சரவணன்(24), வல்லரசு (22), காளீசுவரன் (33), சிவசங்கர் என்ற சிவகுமார் (22), உசைன் (24) என தெரிய வந்தது.

இவர்கள் மண்டல மாணிக்கம் மறக்குளத்தை சேர்ந்த பாலகுமார் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News