- நடுரோட்டில் தீப்பற்றி கார் எரிந்தது.
- மர்ம நபர்கள் காருக்கு தீவைத்துவிட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). இவர் தனது காரில் பொருட்களை வாங்க கடைவீதிக்கு சென்றார். அங்கு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சுரேஷ் பொருட்களை வாங்க கடைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் ரோட்டில் நின்று கொண்டிருந்த அவரது கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் காரின் பெரும் பகுதி எரிந்து சேதமானது. இந்த சம்பவம் தொடர்பாக ஆனைசேரி கிராமத்தை சேர்ந்த செந்தூர்முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ள்ளனர்.
காரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் காருக்கு தீவைத்துவிட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.