உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ தர்மராஜா கோவில் தீமிதி திருவிழா
- கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
- பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டிக்கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ஸ்ரீ தருமராஜா கோவில் ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத திரவுபதி அம்மன் கோவிலில் 94 -ம் ஆண்டு மகாபாரத பிரசங்கம் மற்றும் அக்னி வசந்த தீ மிதி திருவிழா முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழா இன்று தொடங்கி 18-ந் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று காலை கொடி மரத்திற்கு மாலையணிவிக்கப்பட்டு மாவிலை தென்னை ஒலையால் தோரணம் அமைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டு மங்கல வாத்தியங்கள் தாரை தம்பட்டங்கள் முழங்க மகாபாரத கொடி கருடன், ஆஞ்சநேயர் படத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து தீமிதிக்க மஞ்சள் கயிறு கொண்டு காப்பு கட்டிக்கொண்டனர்.