உள்ளூர் செய்திகள்

கீழப்பாவூர் பேரூராட்சிமன்ற சாதாரண கூட்டம்

Published On 2023-09-22 14:48 IST   |   Update On 2023-09-22 14:48:00 IST
  • பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமையில் நடைபெற்றது.
  • குடிநீர் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தென்காசி:

கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மாணிக்க ராஜ், துணைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ. 1,000 வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கீழப்பாவூர் பேரூராட்சி பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வது, மேலும் நடப்பு ஆண்டு அரசின் திட்ட நிதி மற்றும் பொதுநிதியின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை, வடிகால், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வரப்பெற்றுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வார்டு உறுப்பி னர்களின் ஆதரவோடு நிறை வேற்றப்பட்டு வேலை உத்தரவு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News