சென்னை ரெயிலில் ஆந்திரா வாலிபரிடம் ரூ.78 லட்சம் பறிமுதல்- ஹவாலா பணமா?
- ரெயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த பயணி ஒருவரிடம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.
- ஹவாலா பணம் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
ரெயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த பயணி ஒருவரிடம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது பையில் ரூ.78 லட்சத்து 44 ஆயிரம் கட்டுக்கட்டாக இருந்தது. அந்த பணத்திற்கான ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த வேங்கட சதீஷ்(36) என்பது தெரியவந்தது. மேலும் அவர் விஜயவாடாவில் இருந்து டிக்கெட் எடுக்காமல் சென்னை சென்ட்ரல் வரை பயணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்த ரூ.78 லட்சத்தை ரெயில்வே போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஹவாலா பணம் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.