சாரல் திருவிழாவில் வில்வித்தை போட்டி ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை
- செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர்.
- இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ரஸினா ரீஜா 1-ம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜமால் ஜக்கரியா 1-ம் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தைப் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பெற்று பதக்கம் வென்றனர்
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர். பாரத் மாண்டிசேரி, இசக்கி வித்தியாஷ்ரம், வேல்ஸ் வித்யாலயா, செய்யது ரெசிடென்சியல் போன்ற பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ரஸினா ரீஜா 1-ம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜமால் ஜக்கரியா 1-ம் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தைப் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பெற்று பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் வில்வித்தை பயிற்சியாளர் ஜாகிர் உசேன் பாராட்டினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.