உள்ளூர் செய்திகள்
எர்ணாவூரில் நாளை நடைபெறும் அனல் மின் நிலைய கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் பங்கேற்கிறார்
- வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்.
- மக்களாட்சிக் கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (20 -ந்தேதி), காலை 11 மணிக்கு சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்ய உள்ளேன். இக்கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துக்கொண்டு கருத்தினைப் பதிவு செய்வதன் வழியே சூழலியல் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சிக் கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.