மாற்றுத்திறனாளி பெண்களின் உரிமைகள் குறித்து கருத்தரங்கம்
- டெல்லி தேசிய மகளிர் ஆணையம் நிதியுதவியுடன் நடைபெற்றது.
- நீலகிரி மாவட்டத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளும், கலந்துகொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் டெல்லி தேசிய மகளிர் ஆணையம் நிதியுதவியுடன் ஜே.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமம் இணைந்து ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் "மாற்றுத் திறனாளி பெண்களின் உரிமைகள்" குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியின் முதல்வர் தனபால், வேலூர் தொழில்நுட்ப நிறுவன பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையத்தின் இயக்குனரும் பேராசிரியருமான சந்திரசேகரன், நீலகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் மலர்விழி, மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் கோமதி சுவாமிநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இணை பேராசிரியை டாக்டர் கவுரம்மா அனைவரையும் வரவேற்றார். துறையின் தலைவர் காளிராஜன் மாற்றுத்திறனாளி பெண்களின் உரிமைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் கமலா வேணி, முன்னாள் பெண்கள் பாதுகாப்பு அலுவலரும், வக்கீலுமான மரகதவல்லி, ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியை மற்றும் தலைவர் டாக்டர் கனகாம்பாள், முன்னாள் சிறப்பு அரசு வக்கீல் மாலினி பிரபாகரன், மருந்துபகுப்பாய்வு துறை இணைபேராசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளும், 45 பிற பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கல்லூரியின் மருந்தியல் வேதியியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் ஜூபி முடிவில் நன்றி கூறினார்.