உள்ளூர் செய்திகள்

மாதவரம், அண்ணாநகர் மண்டலங்களில் கழிவு நீர் உந்து நிலையங்கள் இன்றும், நாளையும் செயல்படாது

Published On 2025-01-23 14:48 IST   |   Update On 2025-01-23 14:48:00 IST
  • திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் உள்ள சில கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.
  • கழிவு நீர் தொடர்பான புகார்களுக்கு 81449 30903, 81449 30906 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாதவரம் ரவுண்டானா பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் கழிவு நீர் உந்து குழாய் இணைக்கும் பணிகள் இன்று காலை 9 மணி முதல் நாளை (24-ந்தேதி) இரவு 10 மணி வரை நடக்கிறது. இந்த பணிகள் நடைபெறும் 2 நாட்களிலும் மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் உள்ள சில கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.

எனவே இந்த மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் கழிவு நீர் தொடர்பான புகார்களுக்கு 81449 30903, 81449 30906 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News