உள்ளூர் செய்திகள்
பெரம்பூரில் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி முதியவர் பலி
- ஜோலார்பேட்டையில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முதியவர் மீது மோதியது.
- பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடை அருகே இன்று காலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். அவர்யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.