கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம்
- முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
- சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.
கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாட்டின் காவல் துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் தன்னை மீறி பேசுகின்ற எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று விடுகிறார்கள் என்று அச்சப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், சேவியர், சிவாஜி, கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.