உள்ளூர் செய்திகள்

பெண் சிசு கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-10-02 14:16 IST   |   Update On 2022-10-02 14:49:00 IST
  • பெண் சிசு கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • சமூக ஆர்வலர்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனை, பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர். தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்திய இந்த பேரணியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கல்லூரி மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிவது, பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசு கொலை செய்வது அரசுக்கு விதிக்கு புறம்பாக செயல் படுவது சட்டப்படி தவறு உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். சுந்தரம்நகர் வீதி, திண்டுக்கல் சாலை, பெரியகடை வீதி வழியாக மருத்துவமனையை சென்றடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் அய்யன்ராஜ், சுபசங்கரி, டாக்டகர்கள் ஹரிபிரசாத், கோபிநாத், அருண்பிரசாத், சிவபிரியா, ரங்கமணிகண்டன், சமூக ஆர்வலர்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News