வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள், குடும்ப நல முகாம்கள் நடந்தன. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மேலும் இளையான்குடி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
குடும்ப நல முகாம்களில் எவ்வித சிரமுமின்றி, விண்ணப்பங்கள் வழங்கவும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சாலை கிராமத்தில் எம்.பி. நிதியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள், அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஒன்றிய பொது நிதி 2022-23-ன் கீழ் ரூ.5.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை கட்டு மானப்பணிகள் தொடர்பா கவும் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
மேலும் இளையான்குடி பகுதியில் குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வுகளின் போது, துணை இயக்குநர் (சுகா தாரம்) விஜய் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) பெருமாள்சாமி, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முனியாண்டி, இளை யான்குடி பேரூராட்சித் தலைவர் நஜீமுதீன், இளை யான்குடி வட்டாட்சியர் கோபிநாத், இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.