உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் தீமிதித்து வழிபாடு
- முத்துமாரியம்மன் கோவில் தீமிதித்து வழிபாடு நடந்தது.
- நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. விஸ்வகர்மா மகாசபை சங்கம் நடத்தும் 155-ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2-வது வெள்ளிக்கிழமை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அழகு குத்தி வந்து கோவில் முன்புறம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவழும் பிள்ளை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து வானவேடிக்கையோடு சாமியாடி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.