தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா
- காரைக்குடி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது.
- கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பா ளர் ஹேம லதா செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, நகர செயலாளர் குண சேகரன், மகளிரணி நிர்வாகிகள் குழந்தை தெர சாள், திவ்யா சக்தி, ராஜேஸ் வரி சேகர், சங்கீதா செல்லப் பன், மஞ்சரி லெட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் சிறப்புரையாற்றினர். முனை வர் எழிலரசி, தலைமை பேச்சாளர் புவியரசி ஆகி யோர் பெண்கள் முன் னேற்றத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மானா மதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உள்பட ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள், மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மணி மேகலை நன்றி கூறினார்.