உள்ளூர் செய்திகள்

தீர்த்தவாரி நடந்தபோது எடுத்த படம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் நடந்த தீர்த்தவாரி

Published On 2023-05-06 14:05 IST   |   Update On 2023-05-06 14:05:00 IST
  • பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
  • கொடியிறக்கத்துடன் ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம்

25-ந் தேதி தொடங்கியது. தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளினர். கடந்த 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந் தேதி தேரோட்டம் நடந்தது.

கனமழையால் சித்திரை திருவிழாவின் போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றது. தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் அஸ்திர தேவர் புறப்பாடாகி, கோவிலுக்கு எதிரே உள்ள வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

இதைத் தொடர்ந்து அஸ்திரத்தேவருக்கு வைகை நீரில் பல வகை அபி ஷேகங்கள் நடத்தி, தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

தீர்த்தவாரி உற்சவம் வழக்கமாக கோவிலில் நடைபெறும் என்றாலும் பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து சாந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. கொடியிறக்கத்துடன் ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது.

Tags:    

Similar News