உள்ளூர் செய்திகள்

உற்சவர் அம்மனை சுமந்து கோவிலை வலமாக வந்தனர்.

ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

Published On 2022-07-29 15:18 IST   |   Update On 2022-07-29 15:18:00 IST
  • 48 நாட்கள் கோவிலில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.
  • தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது.

ஓசூர்,

ஓசூர் ராம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை சுயம்பு மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் 10-ம் தேதி, ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, 48 நாட்கள் கோவிலில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.

அதன் நிறைவு நாளை முன்னிட்டும் நேற்று, ஆடி அமாவாசை நாள் ஆதலாலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தினர். பின்னர், கோவிலின் நிர்வாகிகளான, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கோபிநாத், ஜெய்சங்கர் மற்றும் பக்தர்கள், அலங்க ரிக்கப்பட்ட உற்சவர் அம்மனை சுமந்து கோவிலை வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News