பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு
- மாணாக்கர்கள் தங்களது தகவல் தொடர்பு திறனை மேம்படுத்திக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி மிக எளிமையாக எடுத்துரைத்தார்.
- நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
தருமபுரி,
தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கு 'சிறந்த தகவல் தொடர்பு திறன் பெற்றிருத்தல் வாழ்வின் வெற்றிக்கு ஓர் வாயில் படி' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் கரூர் வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் குணசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதில் மாணாக்கர்கள் தங்களது தகவல் தொடர்பு திறனை மேம்படுத்திக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி மிக எளிமையாக எடுத்துரைத்தார்.
நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் கோவிந்தராஜ் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவி யுவஸ்ரீ வரவேற்றார். இறுதியாக நிர்மலா நன்றி கூறினார். இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடு களையும் வைஷ்ணவி, லோகேஸ்வரி, கோகிலவாணி ஆகியோர் செய்து இருந்தனர்.