உள்ளூர் செய்திகள்

சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

உடன்குடியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு வழிபாடு

Published On 2023-07-08 14:19 IST   |   Update On 2023-07-08 14:19:00 IST
  • சிறப்பு வழிபாடை முன்னிட்டு எலுமிச்சைவேறு, வெட்டிவேறு, பச்சைகற்பூரம் ஆகியவை நிறைகுடம் தண்ணீரில் 3 நாளாக தங்களது வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தனர்.
  • இப்படி செய்தால் திருமண தடை நீங்கும், நோய் நொடிகள் தீரும், வீடு சுபிட்சமாக இருக்கும், நாட்டில் நல்ல மழை பொழிந்து வறட்சி நீங்கும் என்பது ஐதீகம்.

உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உடன்குடி ஒன்றியம் மானாடு தண்டுபத்து பஞ்சாயத்துக்குட்பட்ட அரசர் பேட்டையில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கேசவன் ஆலோசனை படி சிறப்பு வழிபாடு நடந்தது.

தலைவி ராஜசிபா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வேல்கனி முன்னிலை வகித்தார். எலுமிச்சைவேறு, வெட்டிவேறு, பச்சைகற்பூரம், மஞ்சள்பொடி ஆகியவை நிறைகுடம் தண்ணீரில் 3 நாளாக தங்களது வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தனர். பின்பு அதை எடுத்து வந்து விநாயக பெருமானுக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அந்த தண்ணீர் பிடித்து அவரவர்கள் வீடுகளில் தெளித்தனர்.

இப்படி செய்தால் திருமண தடை நீங்கும், நோய் நொடிகள் தீரும், வீடு சுபிட்சமாக இருக்கும், நாட்டில் நல்ல மழை பொழிந்து வறட்சி நீங்கி, வீடும் நாடும் முன்னேறும் என்பது ஐதீகம்.

இந்நிகழ்சியில் துணைத்தலைவி பேச்சியம்மாள், செயலாளர் திருமணி, துனைசெயலாளர்கள் சக்திகனி, ராஜகன்னி மற்றும் வேல்கனி முத்துலட்சுமி ,வினிதா, முத்து மாலை, கலா, சத்தியபாமா, ஆறுமுககனி, முத்தம்மாள், கனகா, ராஜேஸ்வரி உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News