உள்ளூர் செய்திகள்

சிறப்பு யாகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

சேதுக்குவாய்த்தான் பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2022-09-16 15:07 IST   |   Update On 2022-09-16 15:13:00 IST
  • பிரதமருக்கு நீண்ட ஆயுள் வேண்டி சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது.
  • கவுதமானந்த புரி சம்பத் சுவாமி யாகத்தினை நடத்தினார்.

தென்திருப்பேரை:

பிரதமர் மோடிபிறந்த நாள் வருகிற 17-ந் தேதி கொண்டாட படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், சேதுக்குவாய்த்தான் பகவதி அம்மன் கோவிலில் பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர், கல்வியாளர் அரியமுத்து குணசேகர் தலைமையில் பிரதமருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், 2024-ல் பா.ஜனதா ஆட்சி அமையவும், மக்கள் நலம் பெற வேண்டியும் இன்று சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது.

யாகத்தினை கவுதமானந்த புரி சம்பத் சுவாமி நடத்தினார்.இதில் தொழிலதிபர், அரசு ஒப்பந்ததாரர் ஸ்டாலின், கூட்டுறவு பிரிவு மாநில துணைத் தலைவர் அருமைதுரை, மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் தமிழ் செல்வி, கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மாரி துரைசாமி, தென்திருப்பரை ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் குமார் என்ற பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள் ஜெயசிங், காமினி, கார்த்திக், ஒன்றிய துணைத் தலைவர் லிங்க சடச்சி, கோமதிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாஜக நிர்வாகி கோமதிராஜ் செய்திருந்தார்.

Tags:    

Similar News