உள்ளூர் செய்திகள்

கபடி பயிற்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்ட போது எடுத்தபடம்.


கோடை கால இலவச பயிற்சி முகாம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

Published On 2022-06-09 09:18 GMT   |   Update On 2022-06-09 09:18 GMT
  • 5- ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப் படுத்தி ஆலோசனை வழங்கினார்.

நாசரேத்:

குரும்பூர் அருகே உள்ள நாலுமா வடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க விளையாட்டு துறை சார்பில் நடைபெறும் 5- ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. நாளை (10-ந் தேதி)வரை நடைபெறுகிறது.

4-வது நாளன்று அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கழக தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப் படுத்தி ஆலோசனை வழங்கினார்.

அப்போது முகாம் பொறுப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் கணேசன், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் எட்வின் தி.மு.க. மாநில மாணவரணி இணை செயலாளர் எஸ்.ஆர். எஸ். உமரிசங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவீன்குமார், கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன், ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News