அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கல்
- ரூ. 60 ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை வழங்கினார்.
- எடமணல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வீல்சேர், மெத்தை வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வ ரன்கோயில் அடுத்த புங்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக அருணாசலம் பணியாற்றி வருகிறார்.
இயல்பாகவே ஏழை, எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர், தான் கல்வி போதிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கணினி உபகரணங்கள், கல்வி உபகரணங்கள், உள்ளிட்ட உதவிகளையும், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் இடர்பாடுகள் சிக்கிய மக்களுக்கும் உணவு, உடை உள்ளிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என எண்ணிய அருணாச்சலம் அமெரிக்கா வாழ் இந்தியரான தனது நண்பர் மோகன் சுதிர் உடன் இணைந்து சுமார் ரூ.10 லட்சம் நிதி திரட்டி தற்போது 8 அரசு பள்ளிக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார்.
அதேபோன்று இரண்டு அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, சக்கரநாற்கா லிகள் உள்ளிட்ட உபகர ணங்களை வழங்கினார்.
புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் பூங்குழலி, நாகராஜ், கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் கோமதி, வட்டார மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி,பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா,ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்கமாலூதீன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று அரசு பள்ளிக ளுக்கான குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்களை அந்தந்த பள்ளி தலைமைஆசிரியரிடம் வழங்கினார்.
அதேபோல் வைத்தீஸ்வரன்கோயில், எடமணல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு உரிய வீல்சேர், மெத்தை உள்ளிட்டபொ ருட்களையும் ஒப்படைத்தார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.