வைத்தீஸ்வரன் கோவிலில் சூரசம்ஹார விழா
- மேற்கு கோபுர வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 13-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமாரசாமிக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தன. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வழிபாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெ ருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
சூரனை முருகப்பெ ருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சா ரியார்களால் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி பொறு ப்பாளர் சரத்சந்திரன், சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால எழிலரசன்,பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அற ங்காவல ர்குழுத்தலைவர் சாமிநாதன்,நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.