உள்ளூர் செய்திகள்

வேதாரண்யத்தில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி

Published On 2022-12-26 13:12 IST   |   Update On 2022-12-26 13:12:00 IST
  • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • படிப்பை இடை்நிறுத்தம் செய்த மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் உள்ள வடமழைராஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

பள்ளி தலைமையாசியர் ராஜேந்தின் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா, துணைத்தலைவர் சபினிஸ்வரி, ஆசிரியர் கருணாநிதி, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் கோகிலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த பிரவீனா, பிரகதீஸ்வரன் ஆகிய மாணவர்கள் பள்ளியில் இருந்து இடையில் நின்றது தெரியவந்தது. உடனே, அவர்களின் பெற்றோரிடம் பேசி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News