உள்ளூர் செய்திகள்

தண்டையார்பேட்டையில் வீட்டில் தூங்கிய பிளஸ்-2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

Published On 2023-06-28 11:56 IST   |   Update On 2023-06-28 11:56:00 IST
  • வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் திடீரென மாணவனின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன், புவனேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயபுரம்:

தண்டையார்பேட்டை விநாயகபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

நேற்று இரவு 8 மணியளவில் அவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் திடீரென மாணவனின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவனின் அண்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஏரியாவில் யார் கெத்து என்பது தொடர்பாக நேற்று மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாணவனின் அண்ணனை குறிவைத்து வந்த மர்ம கும்பல் ஆள்மாறாட்டத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மாணவனை வெட்டி விட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன், புவனேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News