உள்ளூர் செய்திகள்

பழனியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்.

காதலித்த குற்றத்துக்கு ஆயுள்தண்டனை- நண்பரின் திருமணத்துக்கு வினோத பிளக்ஸ் அமைத்த வாலிபர்கள்

Published On 2022-08-29 09:33 IST   |   Update On 2022-08-29 12:33:00 IST
  • காதலித்த குற்றத்துக்காக பெற்றோர்களால் ஆயுள் தண்டனை என்ற திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
  • பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த வினோத போஸ்டர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கோதைமங்கலத்தில் தனது நண்பரின் திருமணத்துக்கு நாளிதழ் வடிவில் பிளக்ஸ் அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோதைமங்கலத்தை சேர்ந்த கவுதம் என்பவர் சென்னையை சேர்ந்த வினிதா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் நடைபெற்றது. இதனை குறிப்பிடும் வகையில் காதலித்த குற்றத்துக்காக பெற்றோர்களால் ஆயுள் தண்டனை என்ற திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

மேலும் திருமணம் ஆகாமல் காத்திருக்கும் நண்பர்களின் புகைப்படங்கள், பயோடேட்டா விவரம் வெளியிடப்பட்டு மணமகள் இருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த வினோத போஸ்டர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News