உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்- டி.ஜி.பி. விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2023-02-03 16:49 IST   |   Update On 2023-02-03 16:49:00 IST
  • தேர்தலை முறையாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தனர்.
  • புகார் மீது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இப்போது நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற போது அமைச்சர் கே.என்.நேருவும், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அருகருகே இருந்துபேசிக் கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில் அமைச்சர் கே.என்.நேரு பணப்பட்டுவாடா குறித்து பேசுவது சர்ச்சையானது.

இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சார்பில் துணைத் தலைவர்கள், வழக்கறிஞர் பால் கனகராஜ், கே.பி.ராமலிங்கம், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்தனர். அமைச்சரின் பேச்சு அடங்கிய ஆடியோ, வீடியோ ஆதாரங்களையும் வழங்கினர்.

முறையான தேர்தல் நடைபெற வருவாய், காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

இதே போல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் புகார் கொடுத்தார்.

தேர்தலை முறையாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தனர்.

இந்த புகார் மீது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இப்போது நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளார். இதையொட்டி டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நடத்த சம்பவத்தை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு சத்யபிரதா சாகு உத்தரவிட்டார்.

இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அதை அனுப்பி வைக்க உள்ளார்.

Tags:    

Similar News