உள்ளூர் செய்திகள்

திருப்பதியில் இருந்து வந்தவாசிக்கு போதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு

Published On 2022-08-22 15:29 IST   |   Update On 2022-08-22 15:29:00 IST
  • அரசு பஸ் டிரைவர் குடிபோதையில் பஸ்சை ஓட்டியது குறித்து விழுப்புரம் தலைமை கோட்டத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • மேலாண் இயக்குனர் குடிபோதையில் பஸ்சை ஓட்டிய டிரைவர் தரணி ஏந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தரணிஏந்திரன். (வயது 45). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்துக்குட்பட்ட புதுச்சேரி கிளை பணிமனையில் டிரைவராக உள்ளார்.

இவர் இன்று காலை திருப்பதியில் இருந்து வந்தவாசி நோக்கி பயணிகளை ஏற்றி பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது டிரைவர் தரணிஏந்திரன் குடிபோதையில் இருந்தார். போதை தலைக்கு ஏறியதால் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார்.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஓட்டினார்.

இதுகுறித்து விழுப்புரம் தலைமை கோட்டத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் மேலாண் இயக்குனர் குடிபோதையில் பஸ்சை ஓட்டிய டிரைவர் தரணி ஏந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News