உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மீது கார் மோதல்- இளம்பெண் பலி

Published On 2022-10-31 14:07 IST   |   Update On 2022-10-31 14:07:00 IST
  • விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர்:

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவரதன் (வயது 40). இவர்களது உறவினர் வீட்டு திருமணம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

இதற்காக விஷ்ணுவரதன் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று இரவு காரில் புறப்பட்டார். அவருடன் மனைவி பிரதீபா, குழந்தைகள் சாருண்ணிகா, சாமுத்ரிகா, உறவினர்கள் கோவர்த்தணன், சரவணராஜ், இவரது மனைவி ஹரிபிரியா (28) ஆகியோர் பயணம் செய்தனர். காரை சரவணராஜ் ஓட்டினார்.

அதிகாலை 3 மணியளவில் விருதுநகர் மாவட்டம் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பட்டையன்கால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News