அதிமுக செயற்குழு கூட்டம்- துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்.
- வரும் ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெறும்.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக செயற்குழு கூடியது.
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
* 2 கோடி புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் இணைக்க இலக்கு வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க வேண்டும்.
* பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்.
* வரும் ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெறும்.
* திமுகவுடன் ரகசிய உறவு வைத்து அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்டிட வேண்டும்.
* விலைவாசி, சொத்துவரி, குடிநீர் வரி மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், திமுக அரசிற்கு கண்டனம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.