உள்ளூர் செய்திகள்

பழனி அருகே ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2022-09-26 10:25 IST   |   Update On 2022-09-26 10:25:00 IST
  • பழனி அருகே ஆண்டிபட்டியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
  • பாதுகாப்பு பணியில் பழனி தாலுகா போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பழனி:

பழனி அருகே ஆண்டிபட்டியில் ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது. பந்தய தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் ரேக்ளா வாகன உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த பந்தயத்தில் பழனி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர், கோவை, தேனி, மதுரை, ஈரோடு, தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. இதில் காளைகள் போட்டி போட்டு சீறிப்பாய்ந்து சென்றன.

200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் பரிசாக தங்க காசு வழங்கப்பட்டது. இதுதவிர மோதிரம், சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டது. போட்டியின்போது ஒரு ரேக்ளா வண்டி பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் 2 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு பணியில் பழனி தாலுகா போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News