அதிவேகமாக வந்த அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து
- விபத்து ஏற்பட்ட அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
திருப்பூர்:
தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்ட சிறப்பு அரசு பேருந்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையம் வந்தடைந்தது. முருகேசன் என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பஸ் டெப்போவிற்கு பேருந்தை எடுத்து சென்றுள்ளார்
அப்போது அதிவேகமாக வந்த பேருந்து திருப்பூர் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த ரோட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.