உள்ளூர் செய்திகள்
பைக் விபத்தில் மூளைச்சாவு- வேலூர் விவசாயி உடல் உறுப்புகள் தானம்
- கடந்த 23-ந்தேதி பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு விவசாயி படுகாயம் அடைந்தார்.
- விவசாயியை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி புதுவசூர் பேங்க் நகரை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 66) விவசாயி.
இவர் கடந்த 23-ந்தேதி அந்த பகுதியில் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.
இன்று காலை அவரது கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும், கண்கள் வேலூர் சி.எம்.சி.க்கும் தானமாக வழங்கப்பட்டது.
பிரகாசத்திற்கு கலா என்ற மனைவி பாலாஜி, ராஜசேகரன் என்ற மகன்கள் உள்ளனர்.