உள்ளூர் செய்திகள்
வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த அதிசயம்... பெண்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்
- வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
- தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் சாலை ஓரத்தில் பழமையான வேப்ப மரம் ஒன்று உள்ளது.
இந்த வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் அதை செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர்.
இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் அந்த வேப்ப மரத்தை சுற்றி மஞ்சள் தெளித்து வேப்பமரம் முழுவதும் சந்தனத்தை பூசி அதில் குங்குமமும் வைத்து பத்தி, கற்பூரம் ஏற்றி அதை பக்தியுடன் வழிபட தொடங்கினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.