உள்ளூர் செய்திகள்
- தஞ்சையில் பல நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றபட்டது.
- மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் என்.கஸ்தூரி தலைமையில் மேற்கண்ட இடங்களில் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணி மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி 34-வது வார்டு சீனிவாசம்பிள்ளை சாலை பகுதியில் ஒரு காம்ப்ளக்ஸ் பின்புறம் சில இடங்களில் குப்பைகள் பல நாட்களாக சூழ்ந்து காணப்பட்டது.
மேலும் கழிவுநீர் வாய்க்கால் மேல்புறம் செடி கொடிகள் படர்ந்து புதர்போல் காட்சியளித்தது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் என்.கஸ்தூரி தலைமையில் மேற்கண்ட இடங்களில் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணி மேற்கொண்டனர்.
செடி, முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி கழிவுநீர் அதற்குரிய வழிகளில் தடையில்லாமல் ஓட விடப்பட்டது. தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதனால் தற்போது அந்த இடம் சுத்தமாக காட்சியளிக்கிறது.