உள்ளூர் செய்திகள்

செட்டியாபத்து ஊராட்சி சிவலூரில் ரேஷன் கடையை திறந்து வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொருட்களை வழங்கிய போது எடுத்த படம்.

மக்களின் தேவைகளை உடனுக்குடன் முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2023-03-19 12:27 IST   |   Update On 2023-03-19 12:27:00 IST
  • உடன்குடி ஊராட்சி ஓன்றியத்துக்கு உட்பட்ட குலசேகரன்பட்டினம் ஊராட்சி காமராஜர் நகர் ஆகிய இடங்களில் 3 பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்.
  • பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.

உடன்குடி:

உடன்குடி ஊராட்சி ஓன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை ஊராட்சி சுதந்திர நகர், செட்டியாபத்து ஊராட்சி சிவலூர் காலனி, குலசேகரன்பட்டினம் ஊராட்சி காமராஜர் நகர் ஆகிய இடங்களில் 3 பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி பேசி யதாவது:-

முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சி மக்களோடு மக்களாய் இருந்து மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

இதைப்போல மக்கள் தேவைகளை புரிந்து மக்களுக்கு உடனுக்குடன் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தான்.அதனால் தான் தமிழகம் இன்று வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டி ருக்கிறது. கிராம மக்கள் பொதுமக்களின் அத்தி யாவசிய கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று எங்களை போன்ற அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதனால் தான் பொது மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வரு கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், ஊராட்சி மன்றத் தலைவர் கள் பாலமுருகன் (செட்டியா பத்து), ராஜரத்தினம் (வெள்ளாளன்விளை), சொர்ணப்பிரியா (குலசேகரன்பட்டினம்), உடன்குடி தொடக்க வேளா ண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ் பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராம ஜெயம். உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மகா விஷ்ணு, ரவிராஜா, சிராஜூ தீன், குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கணேசன், தி.மு.க. மாநில பிரசார பிரிவு செயலர் ஜெசிபொன்ராணி, உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News