மாணவியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் தப்பி ஓட்டம்
- பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
- பிளஸ்-2 மாணவி யுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவாக மாறியது.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
மாணவியுடன் பழக்கம்
மனைவி, குழந்தை களுடன் பெரம்பலூரில் வசித்து வந்த இவருக்கு, சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி யுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவாக மாறியது. இதை தொடர்ந்து அந்த மாணவியை பல இடங்க ளுக்கு அழைத்து சென்று பிரபாகரன் உல்லாசமாக இருந்தார்.
8 மாத கர்ப்பம்
இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து மாணவி யிடம் கேட்டபோது, போலீஸ்காரர் பிரபாகர னுடன் ஏற்பட்ட பழக்கத் தால் கர்ப்பமானதாக அவர் தெரிவித்தார்.
போலீசில் புகார்
இதுகுறித்து ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத் தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், விடுமுறையில் சிறுவாச்சூர் வந்திருந்த போலீஸ்காரர் பிரபா கரனை நேற்று மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.
தப்பி ஓட்டம்
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது பிரபாகரன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி வந்து, வெளியில் தயாராக இருந்த நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பினார். அவரை மகளிர் போலீசார் துரத்தி சென்றனர். ஆனாலும் அவரை பிடிக்க முடியவில்லை.
தனிப்படை
இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய பிரபாகரனை தேடி வருகிறார்கள். மேலும் அவரது செல்போன் என்னை வைத்தும் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை ஆய்வு செய்து வரும் போலீசார், விரைவில் அவரை கைது செய்வோம் என்று தெரிவித்தனர்.