உள்ளூர் செய்திகள்
பெரியகுளத்தில் கடையை உடைத்து ஜவுளி, வெள்ளிப் பொருட்கள் திருட்டு
- கதவு, பூட்டை நெம்பித்திறந்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ஜவுளிகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் குழந்தைவேல் மகள் கவிதபிரியா (43). இவர் வடகரை புதிய பஸ்நிலையம் அருகே ஜவுளி மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றனர். மறுநாள் காலை பார்த்த போது கடையின் வெளிப்பக்க ஷோ கேஸ் கண்ணாடி உடைக்கப்பட்டி ருந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த கவிதபிரியா உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது ஷட்டர் கதவு பூட்டை நெம்பித்திறந்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது. கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ஜவுளிகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.