கிணற்றில் தவறி விழுந்த 2 குழந்தைகள் சாவு
- திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் அருகே காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசீர், இவர் சென்னையில் மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவி காவியா (வயது 21) இவர்க ளுக்கு 1½ வயதில் பவ்மாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
காவியா கடந்த 6 மாதமாக போளூர் தாலுகா பெரியகரம் அருகே காந்தி நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ஆசீர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து வந்து செல்வார்.
காவியாவின் தாய் வீட்டில் அவரது அண்ணன் தமிழ்ச் செல்வன், அண்ணி பிரீத்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிந்துபாரதி (2) என்ற மகளும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் காவியா வீட்டின் பின்புறம் காலைக்கடனை முடிக்க சென்றார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பவ்மாஸ்ரீ யும்,சிந்துபாரதியும் காவியாவை தேடிக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றனர்.
அப்போது அருகே உள்ள தரைமட்ட கிணற்றில் 2 குழந்தைகளும் தவறி விழுந்து விட்டன. இதனை கவனிக்காமல் காவியா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் பிரீத்தி, குழந்தைகள் இருவ ரும் எங்கே? என்று கேட்டார்.
நான் அவர்களை பார்க்கவில்லையே என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் குழந்தைகளை தேடினர். பின்னர் அருகில் உள்ள கிணற்றில் சென்று பார்த்தபோது 2 குழந்தைகளும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பிரீத்தி உடனே கிணற் றில் குதித்து குழந்தைகளை தூக்கமுயற்சித்தபோது முடிய வில்லை. உடனடியாக அவர் கூச்சலிட்டத்தில் அக்கம்பக் கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து குழந் தைகளை மீட்டனர்.
பின்னர் போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தைகள் இறந் துவிட்டன என்று கூறினர். இதைகேட்ட அவர்கள் கதறி அழுதனர்.
அதைத்தொடர்ந்து குழந்தைகளை பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.