உள்ளூர் செய்திகள்

25-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

Published On 2023-11-19 14:05 IST   |   Update On 2023-11-19 14:05:00 IST
  • தீபத்திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
  • கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மூடி வைக்கப்பட உள்ளது.

அதன்படி காமராஜர் சிலை அருகில் உள்ள மதுபான கடை, வேங்கிக் கால் புறவழிச்சாலை உள்ள மதுபானக்கடை, மணலூர் பேட்டை சாலையில் உள்ள மதுபான கடைகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் தனியார் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக் கான அங்காடி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News