உள்ளூர் செய்திகள்
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் 28-ந் தேதி 2-ம் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.
விழாவைமுன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதணை நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி அம்மனை தரிசனம் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தார்.
கோவில் சார்பில் கணேஷ் சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினார். மாலையில் திருவண்ணாமலை டி.ஆர் பிச்சாண்டி குழுவினர் நாதஸ்வர கச்சேரி நடந்தது.
இரவில் துர்க்கா அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் இ.ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் மகாதேவன், சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.