கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு தாலுகா, அனக்காவூர் ஒன்றியம், கீழ் கொளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்தி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்குள்ள பழங்குடியினர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு வழங்கும் 100 சதவீதம் மானியத்துடன் 32 ஆயிரம் மதிப்பீட்டில் 18 குடும்பங்களுக்கு மாடுகள் வாங்க காசோலை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் திராவிட முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் வழக்கறிஞர் புரிசை சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.