கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக மோதல்
- ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
- 2 பேர் கைது
செய்யாறு:
செய்யாறு அடுத்த பெரிய வேலி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 35). ஊர் நாட்டாண்மைதாரர்.
இந்த பகுதியில் ஓசூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடத்துவது குறித்து கடந்த 28-ந் தேதி கிராம மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதே பகுதியை சேர்ந்த இளைய குமார் (23) என்பவருடன் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஜெயகாந்தனுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென ஜெயகாந்தனை இளைய குமார் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார்.
இதில் ஜெயகாந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை ஜெயகாந்தனின் அண்ணன் ஜெயக்குமார், தந்தை பெருமாள், தாயார் தங்கமணி ஆகியோர் தட்டி கேட்டனர்.
இளைய குமாருக்கு ஆதரவாக அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஜெய காந்தனின் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இளைய குமாரின் உறவி னர்கள் கட்டை மற்றும் இரும்பு ராடால் ஜெய காந்தனின் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த ஜெயகாந்தனின் குடும்பத்தி னரை அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைய குமார், மற்றும் தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.