தி.மு.க. கிளை செயலாளர் கூட மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்கள்
- ரெய்டு மூலம் தங்கமணி, விஜயபாஸ்கரை அடிமையாக வைத்தனர்
- கழக முன்னோடிகளை பார்க்கிற போது கலைஞர் இல்லையே என்ற எனது ஏக்கம் தீர்க்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், 10 ஆயிரத்து 100 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் ஆகியவை திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நேற்று இரவு நடை பெற்றது.
கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்ச ரும், தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப் பினருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம். பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், எஸ். அம்பேத்குமார், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 10,100 கழக முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கொழி வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசியதாவது:-
இன்று மிக மிக முக்கியமான நாள். 1968-ம் ஆண்டு இதே ஜூலை 18-ந் தேதி தான் பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது அதே நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்றைக்கு எப்படி தமிழ் நாடு என்றபெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களோ அப்படியே இன்றைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அன்று அண்ணா உறுதியோடு இருந் தது போல இன்றும் நமது தலைவர் ஸ்டாலின் உறுதியோடு தமிழ்நாடு என்றபெயரை மாற் றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தமிழ்நாடு என்ற பெயருக்கு மாநிலத்தின் ஆளுனர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் இன்றைக்கு அ.தி.மு.க. ஆண்டு கொண்டி ருந்தால் இன்றைக்கு தமிழ் நாடு என்று பெயரையும் மாற் றியிருப்பார்கள் ஆகவே தமிழனை மட்டுமல்ல தமிழ்நாட்டையும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார். இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆட்சியாக தி.மு.க.ஆட்சி உள்ளது.
ஆனால் பாசிச பா.ஜ.க. அரசு தி.மு.க.வை எப்படியாவது அழிக்கலாம் என்று பகல் கனவு காண்கிறது. அதற்காக அமலாக்கதுறையினர் மூலம் நம்மை மிரட்டி பார்க்கிறது தி.மு.க.வில் பல அணிகள் உள்ளன.
இளைஞரணி, மகளிர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி என பல அணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணி ஈ.பி.எஸ். அணி, தினகரன் அணி, சசிகலா அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபா டிரைவரின் அணி என பல அணிகள் உள்ளது.
அதேபோல் பா.ஜ.க.வில் ஈ.டி. அணி (அமலாக்கத்துறை), சி.பி.ஐ. அணி, முத்துறை அணி என்று அணிகள் உள் ளன. இந்த அணியை கொண்டு பா.ஜ.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டி பார்த்தது ஒன்றும் கிடைக்க வில்லை.
இப்போது அமைச்சர் பொன்முடியை மிரட்டி பார்க்கிறது அங்கும் ஒன்றும் கிடைக்காது. சட்ட ரீதியாக சட்டப் போராட்டம் நடத்தி இதனை நாங்கள் எதிர்கொள்வோம்.
விஜயபாஸ்கர், தங்கமணி போன்றவர்களிடம் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி அவர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டார்கள். இது அ.தி.மு.க. ஆட்சி. இல்லை.நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம். ஈ.டி.க்கும் (அம லாக்கத்துறை) பயப்பட மாட் டோம். தி.மு.க. கிளை கழக செயலாளர் கூட உங்கள் மிரட்டலுக்கு பயப்பட மாட்டான்.
நான் முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தேன். அந்த வாய்ப்பை தந்த அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது என் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
கழக முன்னோடிகளை பார்க்கிற போது கலைஞர் இல்லையே என்ற எனது ஏக்கம் தீர்க்கிறது. அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.