உள்ளூர் செய்திகள்
ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
- 3 மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது
- காருடன் ஒருவர் கைது
வெம்பாக்கம்:
தூசி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ள அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.
அதில் தடை செய்யப்பட்ட போதைபொருட்களை 3 மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து
ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஜே.ரமேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.