தகுதியான பெண்களுக்கு ரூ.1000 கிடைக்கும்
- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்
- விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் ஊசாம்பாடி ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெற விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பொது மக்களிடம் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் இதில் தகுதியானவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் அப்படி கிடைக்கப்பெறா தவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் மேல்முறையீடு செய்து பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர். கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், எம் பி அண்ணாதுரை எம் எல் ஏ சரவணன், ஒன்றிய செயலாளர் ராமஜெயம்,
ஒன்றிய குழுத்தலைவர். தமயந்தி ஏழுமலை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.